பஞ்சாப் பாஜக தலைவர் வீட்டருகே குண்டுவெடிப்பு..!
பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டருகே வெடிகுண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் அருகே நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில், உயிர்சேதம் ஏற்படவில்லை. இதனை அடுத்து, மனோரஞ்சன் காலியா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





