நித்யானந்தாவுக்கு எதிராக “ப்ளு கார்னர் நோட்டீஸ்”
சிறுமிகளை கடத்திய புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தாவை பிடிக்க இன்டர்போல் காவல்துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி வைத்து இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அங்கிருந்து சிறுமிகளை காவலர்கள் மீட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை தேடி வரும் நிலையில் யூடியூபில் தோன்றி அவ்வப்போது சொற்பொழிவாற்றி வருகிறார். ஆனால் அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .இந்நிலையில் டெல்லியில் உள்ள இன்டர்போல் பிரதிநிதியை குஜராத்காவலர்கள் நாடினர்.
இதனையடுத்து நித்யானந்தாவுக்கு எதிரான ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நித்தியானந்தா எந்த நாட்டில் இருந்தாலும் அவர் குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக இந்தியாவிற்கு தெரிவிக்க வேண்டுமென்று அனைத்து நாடுகளின் காவல்துறைக்கும் இன்டர்போல் உத்தரவிட்டுள்ளது.






