--- --:--:-- --

காலிஃப்ளவரில் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் கூடிய பேண்டெஜ்..!

5

பல்பொருள் அங்காடியில் வாங்கிய காலிஃப்ளவரில் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் கூடிய பேண்டெஜ் ருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சாலையில் உள்ள பிரபல பல் பொருள் அங்காடியில் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கி உள்ளார். அதனை வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்தபோது உள்ளே இரத்தத்துடன் கூடிய மெடிக்கல் பேண்டெஜ் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

பல்பொருள் அங்காடி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர் உரிய விளக்கம் கிடைக்காததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்துள்ள பல்பொருள் அங்காடி வளாகம் பக்கோடா பாக்கெட்டே எங்களுடையது இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

Right Menu Icon