--- --:--:-- --

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்த மாணவி 20 நாட்களுக்கு பின் உயிரிழப்பு..!

4

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி சரியாக தேர்வு எழுதாத விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Right Menu Icon