பிரபல உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட பாஜக பெண் நிர்வாகி திடீர் வாந்தி, மயக்கம்..!
புதுச்சேரியில் பாஜக பெண் நிர்வாகி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பெண் நிர்வாகிகள் மோகன் பிரபல உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டதாகவும் அந்த பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உணவக மேலாளரிடம் கேட்ட பொழுது முறையான பதில் அளிக்கவில்லை என கூறிய மூவர் உணவகத்தின் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





