பா.ஜ.க கிளைச் செயலாளர் இ.பி.எஸ்-கு தமிழ்நாட்டின் வளர்ச்சி பிடிக்கவில்லை – ஸ்டாலின்
ஈரோட்டில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சி பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக உள்ள இ.பி.எஸ்கு எரிச்சலை தருகிறது. என்னடா கால்களை எல்லாம் வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம்.
இந்த தி.மு.க-வும் ஸ்டாலினும் நம்மை ஒரு தேர்தலிலும் வெற்றி பெற விடவில்லை என்ற பொறாமையில் பொய்யை பரப்புகிறார்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு அருகதை இருக்கா?” என்றார்.





