4 கை, கால்களுடன் உடல்கள் ஒட்டிப்பிறந்த வினோத குழந்தை..! பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரியில் நான்கு கை கால்களுடன் இரண்டு உடல்கள் ஒட்டிப் பிறந்த வினோத குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுகுமார், சுசாந்தி தம்பதியினர் பர்கூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
6 மாத கர்ப்பிணியான சுசாந்தி அரசு மருத்துவமனைக்கு வழக்கமான செக் அப்பிற்காக சென்ற நிலையில் ஸ்கேனில் குழந்தைக்கு நான்கு கால்கள் இருப்பது தெரிய வந்தது. இந்தக் குழந்தையால் சுஷாந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குழந்தை பிறந்த பின்னர் உயிருடன் இருப்பது சந்தேகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சுசாந்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வெளியே எடுக்கப்பட்ட குழந்தைக்கு இரண்டு உடல்கள் ஒட்டியிருந்தது உடன் விகாரமான தலையும் நான்கு கை, கால்ளுடனும் இருந்தன. வெளியே எடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை உயிரிழந்தது.







