ஜவுளி கடைக்குள் புகுந்த பைக்..!
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் ஜவுளிக்கடைக்குள் இருசக்கர வாகனம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் நகரில் துணி கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் வந்துள்ளார்.
தன் கட்டுப்பாட்டை இழந்த பைக் கடைக்குள் நுழைந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள போக்குவரத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் பைக்கில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






