4 வது முறையாக பிக்பாஸ் வனிதாவுக்கு மறுமணம்!
நடிகை வனிதா மறுமணம் செய்து கொண்ட பீட்டரின் முதல் மனைவி தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா நேற்று பீட்டர் பால் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் வனிதா திருமணம் செய்துகொண்ட பீட்டர் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பீட்டருக்கு ஏற்கனவே தன்னுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாக ஏழு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையாக விவாகரத்து அளிக்காமல் பீட்டர் பால் மணந்து கொண்டதாக எலிசபெத் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






