--- --:--:-- --

காரமடை பிளிச்சி ஊராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !!!

4

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிளிச்சி ஊராட்சியில் மத்தம்பாளையம் கிராமத்தில் மேட்டுப்பாளையம் சாலை முதல் காமாட்சிபுரம் வரை TNRRIS திட்டத்தின் மூலம் ரூ.90.00 இலட்சங்கள் மதிப்பீட்டில் புதியதாக தார்சாலை அமைத்தல், மத்தம்பாளையம் கிராமத்தில் அம்பேத்கர் நகர் செல்லும் வழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.17.85 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக 3 சிறு பாலங்கள் அமைத்தல்,
பெட்டதாபுரம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.4.10 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கான்கிரீட் சாலை அமைத்தல், கரிச்சிபாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.9.47 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக செக் டேம் கட்டுவதற்கு,
கரிச்சிபாளையம் கிராமத்தில் மயானப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.4.10 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கற்கள் பதித்த (பேவர் பிளாக்) சாலை அமைப்பதற்கான
பூமி பூஜை நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.சாவித்திரி ராஜன் தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நெ.4 வீரபாண்டி முன்னாள் தலைவர் ஜெயராமன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் நர்மதா துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா தண்டபாணி,பிளிச்சி ஊராட்சி மன்ற துணத்தலைவர் ரவிச்சந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனிதா,ஜெயஸ்ரீ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாக்கியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பிரேமா, சுப்பையன், அவர்களும்,கோபால்சாமி,சின்னராஜ், தினேஷ், சரசு, காளியம்மாள் மற்றும் ஊராட்சி செயலர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon