பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை..!
திருப்பூர், உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி இன்று கோவில் நிர்வாகம் தரப்பில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
மேலும் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





