கர்நாடக புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு..!
கர்நாடக புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ரெட்டி ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக பங்கேற்ற கூட்டத்தில் எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்தே எடியூரப்பாவின் ஆளுநர் மாளிகை சென்ற பசவராஜ் பொம்மை பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் பசவராஜ் பொம்மைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.






