--- --:--:-- --

மூன்று வித ஆன்லைன் கேம்களுக்கு தடை..!

7

சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பயனரை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

 

ஆன்லைன் கேம் வாயிலாக மதமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரில் மும்பையில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த ராஜீவ் சந்திரசேகர் ஆன்லைன் கேம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அதன் படி மூன்று வகையான ஆன்லைன் கேம்களுக்கு நாட்டில் தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

அந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் ஆன்லைன் விளையாட்டுகளை அங்கீகரிக்க உருவாக்கப்படும் என்றும் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

Right Menu Icon