--- --:--:-- --

கர்நாடகாவில் ரயில் மீது அறுந்து விழுந்த மின்சார கம்பி..!

8

ர்நாடக மாநிலத்தில் ரயில் மீது மின்கம்பிகள் அருந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் கே எஸ் ஆர் பெங்களூர் ரயில் நிலையத்திலிருந்து மங்களூர் வழியாக கேரள மாநிலம் நோக்கி கண்ணூர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

 

இந்த ரயில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மின் கம்பி ரயில் பெட்டிகள் மீது விழுந்தது. உடனே ரயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ரயில் ஊழியர்கள் மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின்கம்பிகள் சரி செய்யப்பட்டு விரைவில் புறப்பட்டு சென்றது.

 

Right Menu Icon