பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..!
யூடியூபில் ஆபாசமாக பேசி பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள பஜ்ஜி மதனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மதுரை ஜாமின் மனுவை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது விசாரணை முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என மதன் தரப்பில் வாதிடப்பட்டது. ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.






