--- --:--:-- --

உடலை வளைத்து ஆடும் பாபா ஜாக்சன்! பிரபலங்களிடம் வைரல்

6

டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஒருவர் இந்தி பாடல் ஒன்றுக்கு உடலை வளைத்து ஆடும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் யுவராஜ் என்ற கலைஞர் பாபா ஜாக்சன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோக்களுக்கு பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் அமிதாப்பச்சன் என ரசிகர்கள் அதிகம்.

 

இந்த நிலையில் பாஷா பாலிவுட் படத்தின் பாடல் ஒன்றுக்கு யுவராஜ் காற்றில் மிதப்பது போன்று உடலை வளைத்து ஆடும் வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் பலரது கவனத்தையும் பெற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

கொரொனா வைரஸ் பாதிக்காத வெளிநாட்டுத் தொழிலாளர்களை தங்க வைப்பதற்காக இரண்டு மிதக்கும் தொகுப்பு வீடுகளை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் நெருக்கமான இடங்களில் தங்கியுள்ள இடங்களில் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

 

இந்த நிலையில் கொரொனா பாதிக்காத நபர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றும் முயற்சியை சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது. ராணுவ முகாம்கள், பொருட்காட்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு மிதக்கும் தொகுப்பு வீடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

 

தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையிலும் மருத்துவ வசதிகளுடனும் அந்த மிதக்கும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் உரிய நேரத்தில் உணவுகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon