--- --:--:-- --

அரசு இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக புகார் தெரிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடும்பத்துடன் ஆட்டோ டிரைவர் தீகுளிக்க முயற்சி.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு !!!

11

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரை அடுத்த இஎஸ்ஐ மருத்துவமனை பகுதியைச்சேர்ந்த சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு சொந்தமான இடம் சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை எதிரில் உள்ளது.

 

மேலும்,இவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் பெட்டிக்கடை அமைத்துள்ளதாக சூலூர் கலங்கல் பகுதியை பகுதியைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பியிருந்தார். புகாரின் பேரில் அந்த இடம் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டது தான் என உறுதி செய்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஆட்டோ டிரைவரான ஜீவானந்தம் இன்று காலை தனது மனைவி மற்றும் மகளுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.வழக்கமாக திங்கட்கிழமை நாட்களில் மட்டுமே பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வருவது வழக்கம். அந்த நாட்களில் மட்டும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை நிறுத்தி சோதனை செய்வார்கள்.

ஏற்கனவே,பல்வேறு தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் அரங்கேறி உள்ளதால் இந்த தீவிர கண்காணிப்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும். இந்நிலையில் குடும்பத்துடன் வந்த ஜீவானந்தம் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

 

அப்போது, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை தடுத்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அப்போது,ஆட்டோ ஓட்டுநர் ஜீவானந்தம் சூலூர் பகுதியை சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு இடத்தை ஆக்கிரமித்து அதற்கு புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon