--- --:--:-- --

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

IMG-20200721-WA0495

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கே.டி.சி,நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் பிரேம்குமார் (29)ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கௌசல்யா (25). இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கௌசல்யாவின் உடன்பிறந்த சகோதரி மகேஸ்வரி. இவரது கணவர் விக்னேஷ்வரன் (30). பழ வியாபாரம் செய்து வருகிறார். மகேஸ்வரிக்கும் பிரேம்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

இதனை மகேஸ்வரியின் கணவர் விக்னேஸ்வரன் கண்டித்து வந்துள்ளார். இன்று இரவு 8 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மகேஸ்வரியின் வீட்டிற்கு பிரேம்குமார் சென்று வந்துள்ளார். இதனை அறிந்த  விக்னேஸ்வரன் கேடிசி நகரில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு சென்று, அங்கு அவரை வீட்டிற்கு வெளியே வரவழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

 

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முத்து, சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

 

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon