கேரள அரசு பேருந்துக்கு வழி விடாமல் சென்று ஆட்டோ ஓட்டுனர்..!
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கேரள அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுனர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளா அரசு பேருந்து ஓன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் அருகே சென்ற பொழுது இதற்கு முன் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேருந்திற்கு வழி விடாமல் ஓட்டுனர் செயல்பட்டுள்ளார்.
மேலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்ததோடு இதை கண்டித்த பயணி ஒருவரை ஆட்டோ ஓட்டுனர் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






