திருமணத்தால் வந்த சோதனை..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரொனா..! தாய் பலி..!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வயது 88 நிரம்பிய இவருக்கு மொத்தம் ஆறு மகன்கள் உள்ளனர். அது ஐந்து பேர்ஜார்கண்டிலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட வராக இருந்தனர்.

 

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள ஒருவர் உறவினரின் உடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு அவர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய ஓரிரு நாளிலேயே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராணி மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது.

 

ஆனால் ஜூலை நான்காம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர். ராணி இறுதி சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உட்பட குடும்பத்தினர் ஏழு பேருக்கும் கொரொனா இருப்பது உறுதியானது.

 

குடும்பத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 8 ஆனது. கொரொனா உறுதி செய்யப்பட்டதால் கோதரர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சகோதரர்கள் அனைவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

 

திங்கள் கிழமை ஐந்தாவது சகோதர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதாவது ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலான 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கு பங்கு கொள்ளாமல் இருந்தால் இந்த நிலை நடந்திருக்காது.


கொரோனா பணியில் உயிரிழக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரை இழக்கும் ராணுவ வீரர்களை வீரமரணம் அடைந்தவர்களாக கருதி அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கலாம் என்று பரிந்துரைக்கு உள்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

கொரொனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக நின்று இந்த வகையில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த குடும்பங்களுக்கு மக்கள் நேரடியாக நன்கொடை கொடுக்கும் விதத்தில் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியிடப்படும் எனவும் கூறப் படுகிறது.பாரத் கீ பீர் என்ற பெயரில் உள்ள ராணுவ வீரர்கள் உதவிய நிதியில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மக்கள் அளித்த நன்கொடையை 250 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


திருவாடானையில் வட்டாரத்தில் உள்ள தரிசு நிலங்களை விலை நிலமாக மாற்ற விவசாய துறை மானியம் வழங்குகிறது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரத்தில் 2020- 2021 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தரிசாக உள்ள நிலங்களில் முளைத்துள்ள சீமைகருவேல் மரங்கள், செடி, கொடிகள,முட்புதர்களை, அகற்றி சீரமைத்து முறையாக விவசாய விளை நிலங்களாக மாற்ற அரசு ரூபாய் பத்தாயிரம் மானியமாக வழங்க உள்ளது.

வேளாண்
வட்டார வேளாண்மை வளா்ச்சி மையம்

இந்த திட்டத்தின் படி மானிய தொகை விவசாயிகளின் வங்கி  கணக்கிற்கு நேரடியாகவழங்கப்படும். இந்த திட்டம் திருவாடானை வட்டாரத்தில் மொத்தம் 70 ஏக்கருக்கு பரப்பளவில் செயல்படுத்த உள்ளது.

 

சீரமைக்கப்பட்ட விவசாய நிலத்தில் சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிர் விதைகள் விதைக்கும் போது தேவையான உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை 50 சதவீத மானியத்தில் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

மேலும் தரிசு நிலத்தை விளை நிலமாக்கி திட்டத்தில் பயன் அடைய விரும்பும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் 5 ஆண்டுகள் தரிசு என வழங்கப்பட்ட சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் திருவாடனை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதி முன் பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். விவசாயிகள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


திருவாடானையில் மின்சார வாரிய அலுவலகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..!

ராமநாபதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழக அரசு மின்வாரியம் தவறான முறையில் கணக்கீடு செய்து மக்கள் கொரோனோ வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டிலேயே இருந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்கள் மீது மின் கணக்கீடு எடுத்ததில் பேரிடரை ஏற்படுத்திவிட்டு அதை சரி செய்யாமல் மக்கள் மீதே கட்டணக் கொள்ளையை நிகழ்த்தலாமா? மத்தியபிரதேசம், கேரளா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அம்மாநில மக்களுக்கு மின்கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.

 

 

ஆனால் தமிழக அரசு மக்களிடம் இருந்து மின்கட்டண கொள்ளையை நடத்துகிறது. என்பதை கண்டித்து கருப்புக் கொடி ஏந்து சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே போல் திருவாடானை தி.மு.க வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


சாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து சென்ற மகேந்திரனும் கொலையா? வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சாத்தான்குளம் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிய பிறகு மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ ஏற்கனவே விசாரித்து வருகிறது.

 

இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரித்து அனுப்பிய பிறகு மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக அவரது தாயார் வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அதில் தனது மூத்த மகன் துரையை தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்த ரகு கணேஷ் தனது இளைய மகன் மகேந்திரனை அழைத்து சென்றதாகவும் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்‌ஐ ரகு கணேஷ் ஆகியோர் தனது மகன் சுயநினைவை இழக்கும் அளவுக்கு தாக்கியதாகவும் கூறியிருக்கிறார்.

 

தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகேந்திரன் கடந்த மாதம் 13ம் தேதி உயிரிழந்ததாகவும் வடிவு கூறியுள்ளார். எனவே தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி ஆட்சியர், மாவட்ட எஸ்பி, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்தது. ஏற்கனவே சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


அண்ணன் நினைவு நாளுக்கு சென்ற தம்பி ஓடஓட விரட்டி கொலை..!

மதுரையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி அண்ணனின் நினைவு நாளுக்கு சொந்த ஊர் வந்தபோது ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். மேல அனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற அந்த நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ரவுடி சத்யா என்பவனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீஸார் கூறுகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் தனது அண்ணனின் நினைவு தினத்திற்காக நேற்று மாலை அங்கு வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மர்ம கும்பல் காலை ரயில்வே கேட் அருகே ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றுள்ளது. பழிவாங்கும் நோக்கில் கொலை அரங்கேறி இருக்கலாம் என்று கூறும் போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.


கேரளாவில் ஏற்பட்டது சுனாமியா? மக்கள் அச்சம்..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து போயுள்ளனர். கொச்சியில் உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள ஒன்றான செல்லம் என்ற இடத்தில் கடல் அலைகள் திடீரென சீற்றமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

 

இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு தங்கள் வீட்டு மாடிகளில் ஏறினர். ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி மீண்டும் வந்து விட்டதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்து போயினர். ஒக்கி புயல் வந்த போது கூட இது போன்ற பெரிய கடல் அலைகளை தாங்கள் கண்டதில்லை என்று கடற்கரை கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த 15 ஆண்டுகளில் தாங்கள் கண்ட மிகப்பெரிய கடல் அலைகள் இதுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் கடும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் ஆயிரத்து 500 பேர் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிப்பேரலையால் உலகம் முழுவதும் 2 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


மகளின் கண் முன்னே தந்தையான செய்தியாளரை கொலை செய்த கும்பல்..!

காசியாபாத்தில் விஜய நகர் பகுதியை சேர்ந்த செய்தியாளரான விக்ரம் ஜோஷி நேற்று இரவு 10.30 மணி அளவில் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வழிமறித்து தாக்கப்பட்டார். இதை கண்டு இரண்டு மகள்களும் ஓட்டம் பிடித்த நிலையில் செய்தியாளரை மட்டும் அக்கும்பல் சரமாரியாகத் தாக்கி பிறகு துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டது.

 

இதில் ஒரு தோட்டா தலையில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் செய்தியாளர் புகார் அளித்திருந்தார்.

 

அதற்கு அடுத்த நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கொரொனாவால் உயிரிழந்த தாய்..! ஜன்னலில் ஏறி தாயின் கடைசி நிமிடங்களை பார்த்த இளைஞன்..!

உலகத்தைத் தனது கைப்பாவை போல மாற்றி உயிர்களோடு விளையாடி வரும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸால் மனித குலம் என்றுமே சந்தித்திராத வேதனைகளை எதிர்கொண்டுள்ளது. இதனை ஆவணபடுத்தும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காண்போர் நெஞ்சை பிழியும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

ஜிகாத்- அல்-சுவைத்தி என்ற பாலஸ்தீன இளைஞனுக்கு கொரோனாவால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது அன்புக்குரிய தாயை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மருத்துவமனையில் மரணத் தருவாயில் இருந்த தனது தாயை பார்க்க இயலாத தாய் அந்த இளைஞன் அந்த மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து கொண்டார்.

 

தனது தாய் தனது இறுதி மூச்சை சுவாசித்து முடிப்பதை கனத்த இதயத்தோடு கண்ணீருடன் இந்த இளைஞர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது கல் மனம் கொண்டோரையும் கலங்கச் செய்தது. இந்த ஒரு புகைப்படம் கொரொனாவின் கோரத்தையும் அது எந்த அளவிற்கு மனித குலத்தை கையறு நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதையும் விளக்குகிறது.

 

இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பலரும் தங்களது வேதனைகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த இளைஞனின் தாய் ஆகச்சிறந்த அன்புத் தாயாக இருந்திருக்கவேண்டும் என்று பலரும் தெரிந்து கூறியுள்ளனர்.