தேனி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணிகளுக்காக இயங்கி வருகிறது. இந்த தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் லைசால், ஆசிட் உள்ளிட்ட ரசாயன கலவைகளை மருத்துவமனை அருகே உள்ள குடோனில் வைப்பது வழக்கம்.

 

அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் ரசாயன புகை மூட்டமாக உள்ளது. இதில் அதிர்ச்சியை தரும் செய்து என்னவென்றால் அந்த குடோனுக்கு மேலாக தான் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி உள்ளது.

 

தீ விபத்து காரணமாக ஏற்படும் புகை அந்த நோயாளிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், புகை உள்ளே செல்லாமல் இருக்க திரைச்சீலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நோயாளிகளுக்கு தேவையான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேக் அப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமீரா ரெட்டி..!

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சமீராரெட்டி. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். சமீரா ரெட்டி என்றாலே ஞாயாபகத்திற்கு வருவது நல்ல உயரம் தான். வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு கதாநாயகிக்கு உரிய எளிமையான குணத்தையும், அழகான நளினத்தையும் கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

 

இந்த படத்திற்கு பின் அவரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.விஷாலுடன் சேர்ந்து வெடி, அசல் போன்ற படங்களில் கொஞ்சம் வாயாடியாக நடித்திருந்தாலும் வாரணம் ஆயிரம் படத்தில் தான் அவருக்கு ரசிகர்கள் உண்டு. சமீபத்தில்தான் சமீரா ரெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மீண்டும் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் துளிகூட மேக்கப் இல்லாத ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தனது வளைகாப்பு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரிதளவில் பேசப்பட்டவர். ரம்யா கிருஷ்ணனுக்கு என தனி ஆட்டிட்யூட் எப்பொழுதும் உண்டு.

 

அது மட்டுமில்லாமல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து அவர் குயின் வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்.

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருக்கும் தனது இரண்டு பெரியயம்மா தற்போது உயிருடன் இல்லை என உருக்கமாகவும் பதிவிட்டுள்ளார்.


பொது முடக்க விதியை மீறி மாட்டிக்கொண்ட நடிகர் விமல் மற்றும் சூரி..!

பொது முடக்க காலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், பரோட்டா சூரி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வனபணியாளர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நடிகர் விமல், பரோட்டா சூரி நடித்த களவாணி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் இருவரும் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் களவாணித்தனம் தான் அதற்கு காரணம். இருவரும் இணைந்து நடித்த தேசிங்குராஜா, புலிவால் போன்ற படங்களின் காமெடி காட்சிகளும் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தன.

 

இப்படி திரையில் களவாணி தனத்தில் ஈடுபட்ட இருவரும் நிஜத்தில் அப்படி செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கொரொனா காலம் என்பதால் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு செல்வதற்கு தற்போது கடும் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் விமலும் பரோட்டா சூரியும் கடந்த வாரம் கொடைக்கானல் சென்று தங்கியிருந்து தடைசெய்யப்பட்ட ஏரியை ஒட்டி அடர் வனபகுதிக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது.

 

அங்கு சென்றவர்கள் ஏரியில் மீன் பிடித்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து அபராதம் விதித்து இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களின் அடிப்படையில் மகேந்திரன் என்பவர் இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

 

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் நடிகர்கள் விமல், பரோட்டா சூரி எப்படி கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வந்தனர்? தடை செய்யப்பட்ட வனப்பகுதியின் வழியாகச் சென்றது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


வனிதா மீது பாஜக சார்பில் புகார்..!

இந்த முழு பொது ஊடகத்தில் தமிழ் நடிகர், நடிகைகள் அவர்களுடைய தனித் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் வனிதா ஊரடங்கின் ஒரு திருமணத்தை நடத்தி விட்டு அதன் மூலம் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

 

வனிதா ஒரு நடிகையாக அறிமுகமானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் வனிதா யார் என்று உண்மையான ரூபத்தை மக்களுக்கு காட்டியது. இந்த நிலையில் வனிதா அதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் அவர் வெற்றியாளராக பரிசு பெற்றார். இதனை தொடர்ந்து முழு முடக்கத்தின் போது அவர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த திருமணம் தான் இவரது பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. பீர்பாலின் முதல் மனைவி தன்னிடம் விவாகரத்து பெறாமல் அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கஸ்தூரி போன்றோர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதற்கு வெளிப்படையாகவும் நேரடியாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் கஸ்தூரியிடம் வாக்குவாதம் நடத்தினார் வனிதா.

 

ட்விட்டரிலும் வனிதா ராமகிருஷ்ணன் வனிதா சண்டை தொடங்கியது. ஊரே இவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. பொது மக்களும் அவரவர் சார்பில் அவர்களது கமெண்ட்டுகளை தெரிவித்து வந்தனர். அதோடு தனக்கு நிறைய போலி அக்கவுண்ட்க வருவதாக கூறி அக்கவுண்டில் இருந்து கமெண்ட்டுகள் வருவதாக கூறி டிவிட்டர் அக்கவுண்டை டீ ஆக்டிவேட் பதிவு செய்துள்ளார்.

 

மேலும் தஞ்சாவூரில் உள்ள பாதிப்பேர் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்கள் தான் என்று வனிதா பேசினார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள பூட்டான்..!

எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையிலான சீனாவின் மிரட்டலுக்கு பூட்டான் பதிலடி கொடுத்துள்ளது. பூட்டானில் அமைந்திருக்கும் சாக்தேன் என்ற வனவிலங்கு சரணாலய பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனா அண்மையில் கூறியிருந்தது.

 

இருதரப்பு பேச்சுகள் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிற நாடுகள் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதி அளிக்க கூடாது என்றும் சீனா கூறியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் பூட்டான் டெல்லியில் உள்ள தனது தூதரகத்தின் மூலம் சீன தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் சீனாவின் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.


ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் என்கவுண்டர் குறித்து விசாரிக்க குழு..!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

 

உத்தரபிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் சில வாரங்களுக்கு முன்பு காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தனியாக விசாரணை குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. உத்தரபிரதேச அரசு சார்பில் ஏற்கனவே இது தொடர்பான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருந்தாலும் அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

 

இந்த சூழலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் சவுகான் தலைமையிலான குழு என்கவுண்டர் குறித்து விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த குழு ஒரு வாரத்திற்குள் விசாரணை தொடங்கும் என்றும் மூன்று மாதங்களுக்குள் அதன் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி கைது..!

நடிகை வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் பிரபலம் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அவருடைய முதல் மனைவி தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டுள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். எனவே இவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் ஒரு புகார் அளித்திருந்தார்.

 

சூர்யா தேவி என்ற பெண்ணும் வடபழனி காவல் நிலையத்தில் வனிதா மீது புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் வனிதா புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்பாக சூர்யா என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உடனும் வனிதா சண்டையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கல்லூரி பருவத்தேர்வுகள் ரத்து : முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பருவ கல்லூரி பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவை பிறப்பித்துள்ளார். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

பலவகை தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் அதேபோன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்குள் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. எனவே பருவத்தேர்வுகளிலிருந்து இன்டர்நல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் என்பது வழங்கப்படும் என கூறியுள்ளனர்.