சுபமுகூர்த்த தினம்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தின நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





