வழக்கு விசாரணைக்கு சட்டை இல்லாமல் ஆஜரான வழக்கறிஞர்..!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர் ஒருவர் சட்டை இல்லாமல் காணொளியில் ஆஜரானது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள நீதிபதிகள் அது மன்னிக்க முடியாத செயல் எனக் கூறுகின்றனர்.
சுதர்சன் என்ற தொலைக்காட்சி மதவாதத்தை தூண்டும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பான வழக்கை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்தது. அப்போது ஆப் இந்தியா என்ற இணையதளத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டை இல்லாமல் ஆஜராகியுள்ளார்.
அதிர்ச்சியான நீதிபதிகள் யாரது என்று கேட்டபோது பதில் சொல்லாமல் லாக் அவுட் செய்துள்ளார். இது மன்னிக்க முடியாத செயல் என அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி இந்து மல்கோத்ரா கூறியுள்ளார்.







