--- --:--:-- --

பிரபல பாடகர் வீட்டுக்கு சீல் வைக்க முயற்சி.. திடீரென திரண்ட மக்கள்..!

1

றைந்த பாடகர் நாகூர் அனிபா பேரனின் வீட்டை வக்பு வாரிய அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மறைந்த பாடகர் அனிபாவின் பேரன் நாகையில் வசித்து வருகிறார்.

 

இவர் வசிக்கும் வீடு மற்றும் கடை உள்ளிட்டவை வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் முறையாக வரி கட்டாத காரணத்தால் வக்பு வாரிய அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

 

மேலும் அவரது வீட்டிற்கு சீல் வைக்க முயன்ற போது அந்த பகுதியில் மக்கள் திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைக்காமல் புறப்பட்டு சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon