--- --:--:-- --

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த இளைஞர்..!

7

விருதுநகர் மாவட்டம் காஞ்சனாபுரத்தை சேர்ந்த லெனின் சென்னை வேளச்சேரியில் தங்கி காலி இடங்களில் விவசாயம் செய்து குறித்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வேளச்சேரி நூறடி சாலையில் உள்ள ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

 

2 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் அங்கு இருந்துள்ளது. அதை பத்திரமாக எடுத்துச் சென்று வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். நேர்மையை பாராட்டிய போலீசார் பணம் மற்றும் பத்திரங்களை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon