நகை பட்டறையில் முக கவசம் அணியாத ஊழியர்களை ஆவேசமாக திட்டிய ஆட்சியர் ராசாமணி ..!
கோவை அருகே நகை பட்டறையில் முக கவசம் அணியாமல் ஊழியர்கள் பணியாற்றுவதை கண்டு அங்கு இருந்தோரிடம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆவேசமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் செல்வபுரம் பகுதியில் உள்ள நகை பட்டறையில் ஊழியர்கள் முககவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அந்த நகை பட்டறையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி நகை பட்டறை நிர்வாக பொறுப்பாளரிடம் ஆவேசமாக பேசினார். கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பணியையும் மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அவர் ஆவேசமாக பேசினார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.







