--- --:--:-- --

வீட்டுக்கு வந்து பணம் கேட்பியா? இஎம்ஐ கேட்ட ஊழியர் மீது தாக்குதல்

1

வீட்டிற்கு வந்து பணம் கேட்பியா இனிமேல் யார் வீட்டிற்கு சென்று பணம் கேட்பியா என்று கூறி ஒரு கும்பல் ஷோரூம் இல் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணாநகரில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இங்கு பைக் வாங்குவதற்காக ஷோரூமிற்குள்ளேயே பல தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றன.

 

அதன்படி பல வாடிக்கையாளர்களும் கடன் உதவி பெற்று தங்களுக்கு பிடித்தமான பைக்குகளை வாங்கி செல்கின்றனர். பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த சித்தர் என்பவர் தனியார் வங்கி கடனுடன் பைக் ஒன்றை அந்த ஷோரூமில் வாங்கி இருக்கிறார்.

 

இரண்டு மாதங்களாக மாதத் தவணையை செலுத்தாமல் இருந்திருக்கிறார். அவர் இதனால் சித்தரின் வீட்டிற்கு சென்ற ஊழியர்கள் மாத தவணையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி சென்றிருக்கின்றனர்.

 

இதையடுத்து தனது உறவினர்களுடன் ஷோரூம் வந்து சித்தன் பனியிலிருந்து ஊழியரை சரமாரியாக அடித்து உதைத்து எனது வீட்டிற்க்கே வந்து பணம் கேட்பியா எனக் கூறிய தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon