--- --:--:-- --

ஈரான் உச்ச தலைவர் படுகொலை- மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்

7

ரானின் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி கண்டிக்காமல் இருப்பது தனது தார்மீக பொறுப்பில் இருந்து விலகும் செயல். பேச்சுவார்த்தையின்போதே ஒரு நாட்டின் பிரதமரை படுகொலை செய்வது, சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.

 

வசுவதைய குடும்பகம் என்று பேசும் இந்தியா, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மௌனம் காப்பது அதன் சர்வதேச நம்பகத்தன்மையை கடுமையாக குறைக்கும். 1994-ம் ஆண்டு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மயமாக்க முயற்சித்தபோது ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஈரானுடன் வைத்திருந்த ஆழமான ராஜதந்திர உறவை பா.ஜ.க அரசு கைவிட்டுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

Right Menu Icon