--- --:--:-- --

அசாம் – மிசோரம் மாநில எல்லையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம்..!

4

சாம் – மிசோரம் எல்லையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள 165 கிலோ மீட்டர் எல்லை தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இரு அரசுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

இந்நிலையில் ஒரு சாரார் எல்லையில் கூடாரங்களை அமைத்ததால் அதனை காலி செய்யும்படி இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கம்புகள், கற்களை கொண்டு மோதியதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

 

வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் இருமாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon