--- --:--:-- --

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. வீடு வீடாக விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி தொடக்கம்..!

2

லைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக வீடு, வீடாக சென்று மகளிர் அளித்த விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

 

இதற்காக மாநில முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் மகளிரடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது விண்ணப்பங்களில் குறிப்பிட்ட தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து வீடுகள் தோறும் சென்று தன்னார்வலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

பெரும்பாலானோர் மின் பயன்பாடு குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை என்பதால் அதை குறித்தும் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

அனைத்தும் முழுமையாக கிடைக்கப்பெற்றதும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலியை பதிவிட்டு சரிபார்க்கப்படும் எனவும் அதன் முடிவில் விண்ணப்பங்களாக உரிமைத் தொகை பெற தகுதி வாய்ந்ததா என்பது தெரிந்து விடும் எனவும் கூறினார்.

 

Right Menu Icon