புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறினால் கைது..!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதி மீறளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 31 ஆம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பொது இடங்களில் அமைதியை சீர்குலைப்பவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.அவசர உதவிக்கு 100, 112 எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் காவலன் எஸ்ஓ ஸ் என்ற செயலியையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.





