மளிகைக் கடை முன் ஆட்கள் நிற்பதற்காகத் தரையில் வட்டமிட்டு ஏற்பாடு
கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் இடைவெளி விட்டு பராமரிப்பதற்கு வட்டமிட்டு நிற்க வைக்கும் முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரொனா பரவலை தடுக்க 21 நாள் முழு உடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவோர், மக்கள் ஒருவருக்கொருவர் தேவையான இடைவெளியில் இருக்க வேண்டும் என்பதற்காக தரையில் சுண்ணாம்பால் வட்டம் போட்டு உள்ளனர்.
ஒவ்வொரு வட்டத்திலும் ஒருவர் நின்று கொண்டு பொறுமையாக பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மளிகை கடையில் பொதுமக்கள் வரிசையாக இடைவெளி விட்டு வந்து செல்லும் வகையில் தரையில் வட்டம் போட்டுள்ளனர்.







