விமானிக்கும் எஞ்சினியருக்கும் இடையே வாக்குவாதம்.!
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று பிற்பகல் புறப்பட இருந்த விமானிக்கும் என்ஜினியர்க்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுமார் ஒரு மணிநேரம் தாமதமானது.
விமானிக்கும், விமானத்தை பராமரிக்கும் எஞ்சினியருக்கும் இடையே விமானத்தின் எரிபொருள் சமநிலை தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது. என்ஜினீயர் விதிகளை ஏற்க மறுப்பதாக கூறி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் வேறு ஒரு என்ஜினியர் தலையிட்டு விமானத்தின் இணைப்புகளை சரி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். பயணிகளின் உயிரோடு தொடர்புடைய இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





