தஞ்சை – ஊட்டி புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவங்கி வைத்த ஆராசா..!
உதகை – தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து தஞ்சாவூர் பகுதிக்கு புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் பின்னர் உதகையிலிருந்து தஞ்சாவூர் வரை வழித்தடத்தில் புதிய பேருந்தை ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தனர். இந்த பேருந்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





