போலி சான்றிதழ் மூலம் விண்ணப்பம்..!
ஒன்றிய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாநிலத்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை போலியானவை என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றிய அரசு, அஞ்சல் துறை நிறுவனங்கள் வங்கிகள் போன்றவற்றில் எழுத்து தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலைகளில் விண்ணப்பித்துள்ள 2500க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உத்திரபிரதேசத்தில் எழுதிய மாவட்ட அஞ்சல் அலுவலகத்தில் பணியில் சேர விண்ணப்பித்துள்ள 500 பேரின் சான்றிதழ்களும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கியது போல் இந்தியை முதன்மைப் பாடமாகக் கொண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலி சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






