--- --:--:-- --

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தேதி தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகிறது..!

8

மிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது. நீட் தேர்வு முடிவடைந்து முடிவுகள் வெளியாகிய நிலையில் தமிழகத்தில் இதுவரை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவில்லை.

 

அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் 45 நாட்களுக்கு பிறகு இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

இந்நிலையில் வருகிற 18-ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத்துறை தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

Leave a Reply

Right Menu Icon