அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயராது : சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை, என துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு பாகங்களாக சிறந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, பின்னர் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகம் அதன் நான்கு பிரிவுகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, எம்ஐடி மற்றும் அதன் 13 உறுப்பு கல்லூரிகள் என இந்தாண்டு கல்வி கட்டணம் உயராது என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




