--- --:--:-- --

ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி எரிவாயு கிணறு தீப்பற்றி எரிகிறது..!

9

விலங்கினங்களால் பயிர்கள் அழிவிற்கும் விவசாயிகள் கொல்லப்படுவதற்கும் பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டு தெளிவுபடுத்த பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு அடிப்படையாக விளங்கிய பெரியகுடி ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு மீண்டும் பேராபத்து ஏற்படுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

காரணம் ஆந்திராவில் இதைவிட அடர்த்தி குறைவான கிணறு வெடித்து தீப்பற்றி எரிவதால் பல்வேறு கிராமங்கள் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரியகுடியில் ஆசியாவிலேயே மிக அதிகமான அடர்த்தி மிகுந்த ஹைட்ரோ கார்பன் கிணறு 2013 ஏப்ரல் ஆறாம் தேதி வொத்து சிதறியது, அதனை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டது.

 

தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் தற்போதைய நிலையில் இக்கிணற்றின் எந்த நேரமும் வெடித்து சிதறி பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது குறித்து உண்மை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாறாகஅருகில் உள்ள மற்றொரு கிணறை அடைக்கிறோம் என்கிற பெயரில் மறு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது.

 

இக் கிணறுகளை திறப்பதற்கு திமுக அரசு மறைமுகமாக துணை போவதாக அங்கே பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மூடப்பட்ட மற்றும் நிறுத்தப்பட்ட கிணறுகளை 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றால் திறக்கப்படும் என்கிற வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே, பேரழிவு திட்டத்தை திமுக அரசு மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறது என்பது வெளிப்பட்டு வருகிறது. இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். விரைவில் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து தமிழக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

 

திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகள் பயிர்களையும் மனிதர்களையும் அழித்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதிகளிலும் காட்டுப்பன்றி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. மத்திய அரசு பிரதமர் காப்பீடு திட்டத்தில் பயிர்கள் அழிந்தாலும் மனிதர்கள் கொல்லப்பட்டாலும் உரிய இழப்பீடு வழங்க அரசாங்க பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இது குறித்து தமிழக அரசின் உடைய வேளாண்மைத்துறை வனத்துறை எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு மத்திய அரசின் அறிவிப்பு குறித்து தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக காப்பீட்டு திட்டத்தில் விலங்குகள் அழிவிற்கு உரிய இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 மூலம் விவசாயிகள் அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்த செய்தித்தாள்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தாமல் சிப்காட் நிலம் கையகப்படுத்தும் வட்டாட்சியர்கள் நேரடியாக களமிறங்கி நிலங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பள்ளிக்கோட்டை கிராமத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகளுடைய விளை நிலங்களை அபகரிக்க பத்திரிகைகளில் விளம்பர கொடுத்துள்ளார்கள். இதனை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் சிப்காட் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது , உயர் மட்டக் குழு உறுப்பினர் சென்னை குமாரவேல், நெல்லை மாவட்ட செயலாளர் ஆபிரகாம், தலைவர் மாரியப்பன் தேவர் மற்றும் காளியப்பன் அருணாசலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Right Menu Icon