மனைவியின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றால் நெருக்கி கொலை செய்த முதியவர்..!
குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றால் நெருக்கி கொலை செய்த கணவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் 70 வயது முதியவர் ஆன இவருக்கு லலிதா என்பவரிடம் திருமணம் ஆகி இரு பிள்ளைகள் உள்ள நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல கடந்த 20ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றால் நெறித்து அவரை கொலை செய்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் எட்டு நாட்களுக்குப் பிறகு கைது செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாலனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போலீசார் அவரை சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடையங்களையும் சேகரித்தனர்.






