கடைக்கு சென்ற பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..!
கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி முதியவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை அவனது தாயார் கடைக்கு அனுப்பிய நிலையில் அந்த பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் மாணவியின் தாய்க்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியன் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதையடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





