மதுரை மாவட்டத்தில் சிறுமிக்கு தொடர் பாலியல் சீண்டல் அளித்த முதியவர்!
மதுரை மாவட்டத்தில் 10 வயதான சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த 68 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அரசடி யைச் சேர்ந்த ஜஹாங்கீர் என்று அந்த நபர் தனது பேத்தியுடன் வீட்டிற்கு விளையாட வரும் பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியை சாக்லேட் கொடுப்பதாக அழைத்து சென்று பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளான்.
வெளியில் யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என சிறுமியை ஜஹாங்கீர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமியிடம் ஏற்பட்ட மாற்றங்களை கொண்டு விஷயத்தை தெரிந்து கொண்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஜஹாங்கீரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.






