--- --:--:-- --

மீண்டும் தேனியில் அரங்கேறிய பெண் சிசுக்கொலை!

1.2

தமிழகத்தில் மீண்டும் பெண்சிசுக் கொலை விவகாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே குழந்தையை எருக்கம்பால் ஊற்றிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் சுரேஷ், கவிதா தம்பி வசித்து வருகிறார்கள்.

 

இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2ம் தேதிகுழந்தை வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தை இறந்ததாக கூறி வீட்டின் அருகிலேயே குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதி கிராம செவிலியர் கவிதாவிடம் குழந்தையை பற்றி விசாரித்த போது குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த கிராம செவிலியர் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளார். சைல்டு லைன் அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், குழந்தையின் இறப்பு சந்தேக மரணமாக பதிவுசெய்யப்பட்டது.

 

குழந்தை உயிரிழப்பு குறித்து தாய் கவிதா, மாமியார் செல்லம்மாளிடம் விசாரணை நடத்தியபோது ஆண் குழந்தையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த மாமியார் துன்புறுத்தியதன் பெயரில் தாய் கவிதா குழந்தையை எருக்கம் பால் ஊற்றி கொன்றது தெரியவந்தது. பெண் சிசுக் கொலை தொடர்பாக தாய் கவிதா மற்றும் மாமியார் செல்லம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் தேதி இதேபோல இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் ஒரு குழந்தை பெற்றோரால் கொல்லப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிறந்த மூன்று நாட்களில் ஒரு பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் நடந்தது. மீண்டும் தலை தூக்கி உள்ள பெண் சிசுக்களின் மரணம் பெரும் சமூக சீர்கேடு குறியீடாக காட்சியளிக்கிறது.

Leave a Reply

Right Menu Icon