மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா! 7ஆம் தேதி குமரியில் பொதுக்கூட்டம்!!
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ம் தேதி கன்னியாகுமரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான நாள் குறித்ததில் இருந்து, தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக – திமுக இரண்டும் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தி, தொகுதி உடன்பாடு காண்பதில் தீவிரமாக உள்ளன.
இம்முறை அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற வேண்டும் என்ற முனைப்புடன் மட்டுமின்றி, தேர்தலில் அதிக வெற்றி பெற வேண்டும் என்று, தமிழக பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. அதற்கேற்ப பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வந்து பிரசார கூட்டங்களில் பங்கேற்றுவிட்டு சென்றுள்ளனர்.
அமைச்சர் அமிஷா, கடந்த 28ம் தேதி தமிழகம் வந்தார். அவர் விழுப்புரம் மற்றும் காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்நிலையில் அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார். அதன்படி, வரும் 7ம் தேதி கன்னியாகுமரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.






