ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவரின் உடலை எடுத்து சென்ற அமரர் ஊர்தி விபத்து..!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களை கொண்டு சென்றபோது பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியதில் ஆறு காவலர்கள் காயமடைந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டங்களில் இருந்து 13 பேரின் உடல்கள் சாலை மார்க்கமாக கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது 13 வீரர்களின் உடல்கள் தனித்தனி அமரர் ஊர்திகளில் வரிசையாக சென்றது. உடல்களைக் கொண்டு சென்று, அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் அவர்களின் பாதுகாப்பு வாகனங்களும் சென்றது. குன்னூர் அருகே வாகனங்கள் சென்றபோது கடைசியாக சென்ற காவல்துறை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் மோதியது.
இதில் திருப்பூர் காவல் துறையை சேர்ந்த 6 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல்களை எடுத்துச் சென்ற அமரர் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்து வரிசையாக வாகனங்கள் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு வாகனமும் முன்னால் சென்ற வாகனம் மீது மோதி சேதமடைந்தது. முன்னெச்சரிக்கையாக கூடுதலாக அமரர் ஊர்தி சென்றதால் விபத்தில் சிக்கிய வாகனத்திலிருந்து வீரரின் உடல் வேறு வாகனத்தில் மாற்றப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.






