--- --:--:-- --

தேர்தலில் விஜயுடன் கூட்டணியா..? – கமலின் பதில்..?

1

க்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். பின்னர் தொண்டர்களிடம் பேசிய கமல், “என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா என கேள்வி கேட்கிறார்கள். ஆனால், முழு நேர அரசியல்வாதி என யாருமே இல்லை. ஓட்டுப் போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாகக்கூட இருக்கவில்லை.

 

எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது” என்றார்.கோவை தெற்கில் தான் தோற்றதற்கு, பல வாக்காளர்கள் ஓட்டுப் போடாததுதான் காரணம் எனவும் கமல் தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்தே கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

 

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி பேசிய கமல்ஹாசன், “விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவரது ஸ்டைல். சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் இருப்பது எனது ஸ்டைல். அவரவர்க்கு என ஒரு ஸ்டைல் இருக்கும்” என்றார்.

 

விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், அரசியலுக்கு வரவேண்டும் என விஜய்க்கு முதன்முதலில் அழைப்பு விடுத்தது நான்தான் என்றார். விஜய்யுடன் அரசியல் தொடர்பாக தான் ஏற்கெனவே பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Right Menu Icon