--- --:--:-- --

அ.தி.மு.க.-வுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

7

பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பதாலும், தேமுதிக இன்னும் கூட்டணிக்குள் வராததால் பாமக கூடுதல் தொகுதிகளைக் கோருவதாலும் அதிமுக-விற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக, அதிமுக இம்முறை 150-க்கும் குறைவான தொகுதிகளிலேயே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

 

வரும் 16-ஆம் தேதி முதல் தனித்தனியாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் மேலாண்மை, பரப்புரைக் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகுழுக்களை அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

Right Menu Icon