--- --:--:-- --

காவிரி குறித்து கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்

3

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் சிவக்குமார், பாஜக சார்பில் சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Right Menu Icon