--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

மிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் நாளை குரூப் – 2 தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பல பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகிறது. எனவே அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் பரிந்துரை செய்திருந்தது.

 

மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், குரூப் – 2 தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை, செவ்வாய் கிழமை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர்.

Right Menu Icon