--- --:--:-- --

திடீரென சாலையை கடந்த யானைகள் கூட்டத்தால் பரபரப்பு..!

1

நீலகிரி மாவட்டம் முதுமலையில் திடீரென சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதுமலை வனப்பகுதி சாலை ஓரம், காட்டு யானைகள், வன விலங்குகள் உணவுக்காக அடிக்கடி வருவது வழக்கம்.

 

தற்பொழுது விடுமுறை நாட்கள் என்பதால் நீர் ஆதார சுற்றுலா விதிகள் இந்த சாலை வழியாக பயணித்து வருகின்றனர். சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டத்தால் சிறிது நேரம் வாகனங்கள் அப்படியே நின்று விட்டன. வனத்துறையினர் யானைகளை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon