அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை
வரும் 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகிறார். சென்னை முகப்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
2026 தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்னும் தி.மு.க உடனான கூட்டணி பேச்சு வார்த்தை நிறைவடையாத சூழல் நிலவுகிறது. அதனால், கே.சி.வேணுகோபாலின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.






